புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு கூட்டம், அக்குழுவின் 16வது தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மேற்பார்வை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்,‘முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிப்பதற்கு ஏதுவாக பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
அணை பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்வதற்கு 5 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீரின் அளவை கணக்கிட்டு, தமிழகத்திற்கு போதிய அளவை பகிர்ந்து அளிக்க வேண்டும்,’என தமிழக அதிகாரிகள் கோரினர். இந்த கோரிக்கையை ஏற்ற குல்ஷன் ராஜ், ‘பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’உத்தரவிட்டார்.