புதுடில்லி : ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என மியான்மர் அரசுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பேச்சலட்டை சந்தித்து பேசினார்.
பின்னர் ஷேக் ஹசீனா கூறியது, ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் நாட்டு குடிமகன்களாக ஏற்க மியான்மர் அரசு மறுக்க கூடாது. அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான கல்வி, உறைவிடம், பணி போன்றவற்றை செய்து தருமாறு மியான்மரை மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி : ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என மியான்மர் அரசுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்