தினமும் உயரும் பெட்ரோல், டீசல் விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ள நிலையில் இவற்றை சமாளிக்க பெட்ரோல், டீசல் சேமிக்க மிக எளிய 10 வழியை நாம் தெரிந்து கொள்ளலாம்.
எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம் என சில முக்கிய குறிப்புகளை கவனிப்போம். முன்னணி ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ் தெரிந்து கொள்வோம்.
பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்
1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும்.நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியுங்கள். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி (specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.
4. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
6. எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள்,அடிட்டீவஸ் பயன்படுத்தாதீர்கள்.
7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸிலேட்ர்களை கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக்காதீர்.
சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.
8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும்.சராசரியாக 50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.
9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை அனைத்து விடுங்கள்.
10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன்படுத்தவும். …. தொடர்ந்து நிலையான வேகத்தில் பயணத்தை மேற்கொள்ளுங்க….!