தேசியக் கொடி ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை! நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற மறுத்த விவகாரம் சர்ச்சையா னநிலையில், அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்களது மனுவில்,   “பேடர அள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி இப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் என்ற முறையில் இந்த விழாவில் அவர் தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மறுத்தார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த கிராம மக்கள் கேள்வி எழுப்பியபோது, தான் உலகளாவிய ‘யெகோவாவின் சாட்சி’ என்ற அமைப்பில் இருப்பதால் எங்கள் சட்டப்படி வணக்கம் என்பது கடவுளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுடைய சட்டம். பைபிளின் சட்டம்.. நான் கடவுளின் சட்டத்தை மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றேன். வணக்கம் கடவுளை மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என எகத்தாளம் பேசியுள்ளார். கிறிஸ்தவ தலைமை ஆசிரியையின் நடவடிக்கை நாடு முழுவதும் வைரலாகி உள்ளது. இதற்கு கடும் கண்னமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அந்த தலைமை ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.  ஆசிரியர் தேசிய கொடியை அவமதித்து விட்டதாகவும், மத அரசியலை பள்ளிக்குள் கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழகஅரசில் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கூறி உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு சம்பள்ம வாங்கிக்கொண்டு பணியாற்றி வரும் ஆசிரியை அரசுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் பேசியது சர்ச்சையானது. கடவுளுக்க மட்டும்தான் வணக்கம் செலுத்துவேன் என்றால், அவர் கடவுளக்கு ஊழியம் செய்துகொண்டு சம்பளம் வாங்கிக்கொள்ளலாமே, எதற்காக அரசு சம்பளம் பெறுகிறார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களால்தான் தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.