மக்களே 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில்
கனமழை
பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (19.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.08.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.08.2022 மற்றும் 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

திண்டுக்கல் (திண்டுக்கல்) 10, ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 9, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 7, பரங்கிப்பேட்டை (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ராசிபுரம் (நாமக்கல்) தலா 6, கே.எம்.கோயில் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை), காரியாபட்டி (விருதுநகர்) அருப்புக்கோட்டை (விருதுநகர்) தலா 5,

திருப்புவனம் (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கடலூர் (கடலூர்), புலிப்பட்டி (மதுரை) , டேனிஷ்பேட்டை (சேலம்) , பரமத்திவேளூர் (மேட்டூர்) சேலம்) தலா 4, புவனகிரி (கடலூர்), வட்டானம் (ராமநாதபுரம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சங்கரன்கோவில் (தென்காசி), மதுக்கூர் (தஞ்சாவூர்), புதுச்சேரி (புதுச்சேரி), தேவாலா (தஞ்சாவூர்), தேவாலா (திருச்சுழிமலை , நீலகிரி) சேலம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சங்கரிதுர்க் (சேலம்) , கமுதி (ராமநாதபுரம்), அவினாசி (திருப்பூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பண்ருட்டி (கடலூர்) தலா 3.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.08.2022: தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.08.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

21.08.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.08.2022, 23.08.2022: இலங்கை கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.