மின்பகிர்மான நிறுவனங்கள் 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்த தவறியதால், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின்பகிர்மான நிறுவனங்கள், மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் 13 மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.