மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.