வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தண்ணீரை காப்பது அனைவரது கடமை என்று பிரதமர் மோடி கூறினார். அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற ” ஜல் ஜீவன் மிஷன் ” ஹார் ஜர் ஜல் திட்ட விளக்க கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் உரையாற்றினார்.
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: தண்ணீர் தன்னிறைவில் கோவா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பலர் பயன் பெற்றுள்ளனர். பெண்களுக்கு பெரிதும் உதவும் திட்டம் ஆகும். தண்ணீர் மிக காப்பாற்றப்பட வேண்டியது. தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். சாதாரண மக்களுக்கும் எளிதான முறையில் தண்ணீர் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தண்ணீரரை சேமிப்பதில் முழு அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீரை காப்பது அனைவரது கடமையாகும். இந்தியாவில் தண்ணீர் சேமிப்பும், காத்தலும் நல்ல நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement