தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அக்ஹ சல்மான், முதல் அரைசதத்தை பதிவு செய்தார்
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 49 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்
ரோட்டர்டாமில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ரோட்டர்டாமில் நடந்தது.
முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 44.1 ஓவரில் 186 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக லீடே 89 ஓட்டங்களும், கூப்பர் 66 ஓட்டங்களும் விளாசினர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராஃப், நவாஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
PC: Twitter
PC: Twitter
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பஹ்கர் ஜமான், இமாம் உல் ஹக் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய 65 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
PC: Twitter
பின்னர் கைகோர்த்த ரிஸ்வான் – அக்ஹ சல்மான் கூட்டணி 92 ஓட்டங்கள் குவித்தது.
ரிஸ்வான் 82 பந்துகளில் 69 ஓட்டங்களும், அக்ஹ சல்மான் 35 பந்துகளில் 50 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
PC: Twitter
பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 21ஆம் திகதி நடக்க உள்ளது.
PC: Twitter