பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்  மீதான வழக்கில், முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்த  சிறப்பு டிபிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த பாலியல்  புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவர் உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகி இருவரும் பணியினை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக  விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்ற பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தனர்.  இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி – பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் ஆவணம் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த  நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் காணாமல் போன ஆவணங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.