இன்று உலக புகைப்பட தினம். நாம் வாழும் அழகான உலகை அப்படியே காட்சிகளாய் உறைய செய்து காலத்திற்கும் நிலைக்க செய்வது கேமராக்கள். டிஜிட்டல் யுகத்தில் அவை ஸ்மார்ட் போன்கள் வழியாக சுலபமாக நம் கைகளுக்குள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் விரும்பிய வண்ணம் நம்மை அழகாக படம் எடுத்து தருகின்றன.
இத்தகைய மாற்றம் வருவதற்கு முன்னாள் எப்படி இருந்திருக்கும். பெரிய பெரிய கேமராக்களை தூக்கி கொண்டு அலைந்து கொண்டிருந்தது உலகம். அதை மாற்றி ஒரு டிஜிட்டல் புரட்சியை செய்தன மொபைல் போன் நிறுவனங்கள். உலக புகைப்பட தினமான இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனின் கேமராக்களில் உள்ள ஆறு வசதிகளை முதன்முதலில் யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று பார்க்கலாம்.
NIGHT MODE
இரவு நேரங்களில் பொதுவாக வெளிச்ச குறைபாட்டினால் போட்டோக்கள் எடுத்தாலும் சரியாக தெரியாதது ஒரு குறையாகவே நீண்ட காலமாக இருந்தது. இதற்கு தீர்வாக முதன் முதலில் Huawei P30 மொபைல் தான் NIGHT MODE ஆப்ஷனை கொண்டு வந்தது. அதற்கு பிறகே Apple மற்றும் Samsung நிறுவனங்கள் அந்த வசதியை அறிமுகப்படுத்தின.
Portrait mode: HTC One M8
ஆரம்ப காலகட்ட மொபைல் போன்களில் ஒரு போட்டோ எடுத்தால் நம்மை சுற்றி உள்ள எல்லாம் தெரியும்படி இருக்கும். அது புகைப்படத்தின் அழகை குறைப்பதை போல் இருக்கும். இந்த குறையை போக்க முதன்முதலில் HTC One M8 மொபைலில் தான் Portrait mode வசதி கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகே APPLE உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இந்த வசதியை கொண்டுவந்தன.
Hybrid zoom
மொபைல் கேமராக்களை பொறுத்த வரை ஒரு காலத்தில் கையில் வைத்து கொண்டு புகைப்படம் எடுத்தாலே சரியாக முகம் தெரியாது என்ற நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் பல்வேறு zooming ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அதில் Oppo தான் முதலில் 10x hybrid zoom வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் Samsung தான் முதலில் சந்தையில் அதை Galaxy S20 யோடு விற்பனைக்கு கொண்டுவந்தது.இதன் மூலம் தொலைவில் உள்ளதையும் நன்றாக படமெடுக்க முடிந்தது.
Super-slow motion
தற்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் முதல் டிக்டாக் வரை slo-mo தான் பிரபலம். ஸ்லோ மோஷனில் ஒரு வீடியோ எடுத்து அதன் பின்னணியில் ஒரு பாடலை கோர்த்து பதிவு போட்டால் மில்லியன் வியூஸ் எல்லாம் சொற்ப நிமிடங்களில் வந்து விடுகின்றன. இந்த வசதியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது Sony Xperia XZ மொபைல் தான். 960fps இல் வீடியோ எடுக்கும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.
RAW images
பொதுவாகவே மொபைலில் எடுக்கப்படும் போட்டோக்கள் JPEG format இல் தான் இருக்கும். அது RAW image-ஐ விட சற்று மாறுபட்டிருக்கும். எனவே பயனாளர்கள் எடிட் செய்து சிறந்த போட்டோக்களை பெறுவதற்காக முதன்முதலில் Nokia’s Lumia 1520 ஸ்மார்ட் மொபைல் தான் RAW images எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது.
Magic Eraser
google இன் Magic Eraser டூல்தான் தற்போது இருக்கிற Al தொழில்நுட்பத்தில் சிறந்தது. ஒரு புகைப்படத்தில் உள்ள தேவையற்ற எல்லாவற்றையும் உங்கள் விருப்பம் போல அழித்துக்கொள்ளலாம். இது முதலில் google இன் Pixel 6 series இல் தான் வெளியானது.
இன்னும் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் அறிமுகமாகியும் ஆராய்ச்சி நிலையிலும் இருந்து வருகின்றன. அவற்றின் லென்ஸ் கண்கள் வழியாக நம் உலகம் இன்னும் அழகாக தெரியும். அதற்காக இந்த உலக புகைப்பட தினத்தில் ஒரு நன்றி.
– சுபாஷ் சந்திர போஸ்.