திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட பாலில் யூரியா கலப்படம் இருந்ததால் 12 ஆயிரத்து 750 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தனியாருக்கு உரிமையான அகிலா ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பால் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, அந்த பாலில் யூரியா கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த லாரியில் இருந்த 12 ஆயிரத்து 750 லிட்டர் பாலை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். பால் நுரை பொங்குவது போல காட்சி அளிப்பதற்காக அந்த பாலில் யூரியா கலக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரப் படுத்தப் படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.