குறைந்துவரும் கொரோனா பரவல்… ஆனால்… WHO அதிர்ச்சி தகவல்!

2019 இறுதியில் சீனாவில் தலைத்தூக்கிய கொரோனா வைரஸ் 2020 இல் மெல்ல மெல்ல எல்லா நாடுகளுக்கும் பரவி, உலக மக்களை உண்டு, இல்லை என்று செய்து வந்தது. கிட்டதட்ட இரண்டாண்டுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த மக்களை காப்பாற்ற, ஆரம்பத்தில் பொதுமுடக்கத்தை கைகொள்வதை தவிர உலக நாடுகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

சரி… இப்படியே பொதுமுடக்கம்… லாக்டவுன்னு போயிட்டே இருந்தா மக்களின் பிழைப்பு என்ன ஆவது என்று உலக மக்கள் மத்தியில் பரவலாக எழுந்த கேள்விக்கு பதிலாகதான், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 2021 தொடக்கத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. டோஸ் 1, டோஸ் 2, பூஸ்டர் டோஸ் என்று கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு கொண்டுள்ளது.

இதன் பயனாக உலக அளவில் பொதுவாக கொரோனா கட்டுக்குள வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு வாரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆளானோரின் எண்ணிக்கை 54 லட்சம் எனவும், இது முந்தைய வார எண்ணிக்கையை ஒப்பிடும்போது 25 சதவீதம் குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் பரவும் கொரோனா தொற்று..! – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

இந்த செய்தியை கேட்டு அப்பாடா என நிம்மதி அடைவோருக்கு அதிர்ச்சி தரும் தகவலையும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதாவது கொரோனா பரவல் உலக அளவில் 25 சதவீதம் குறைந்திருந்தாலும், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு நாடுகளில் 15 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்றும் WHO தெரிவித்துள்ளது.

எனவே என்னதான் பூஸ்டர் டோஸ் வரை தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும், பொது இடங்களில் முககவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு அவ்வபோது கழுவுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என WHO அறிவுறுத்தி உள்ளது.

உயர்ந்து வரும் கொரோனா தொற்று..! – உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல்..!

ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கொரோனா பரவல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவரும் நிலையில், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்று புள்ளிவிவரங்கள தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.