கோவை மாவட்டம் ஊக்கையனூர் பகுதியில் நான்காவது நாளாக வனத்துறை அதிகாரிகள் வன பகுதியை மேப் கொண்டு ஆலோசனை செய்தும், ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையை தேடி வருகின்றனர்
தமிழக கேரள எல்லை பகுதியான கொடுங்கரை பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாயில் காயத்துடன் காணப்பட்டது இதனை அடுத்து கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசப்பிரமணியன் தலைமையில் 7 குழுக்களும் கேரள வனத்துறை சார்பில் 4 குழு அமைக்கப்பட்டு காயமடைந்த காட்டு யானைக்கு மருத்துவம் செய்வதற்காக அதை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை செங்குட்டை குட்டைக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் யானையை பார்த்து உள்ளனர். அப்போது காட்டு யானை உடல் நலம் நன்றாக இருப்பதாகவும், யானை நடை வேகமாக உள்ளதால் வெவ்வேறு இடங்களுக்கு செல்கிறது என வனதுறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஊக்கையனூர் பகுதியில் வன பகுதியில் யானையை கண்டுபிடிக்க வனப்பகுதியின் மேப் பார்த்து ஆலோசனை செய்து ட்ரோன் கேமரா மூலம் வனப்பகுதியை சுற்றி வரவைத்து அடிப்பட்ட காட்டு யானையை தேடி வருகின்றனர்.
மேலும் காயம் அடைந்த யானைக்கு பாதுகாப்புக்காக டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கலிம் கும்கி யானையும் முத்து என்கின்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை மருத்துவர் சுகுமார், ஆனைமலை பகுதியில் இருந்து விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் சதாசிவம் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil