யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.இவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் கல்வி பிரச்சினைகளை ஆராயும் வகையில் ,கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் .இதன் போது இவை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டன.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, கல்வியியற் கல்லூரி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.