பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவு பற்றி பலரும் கேள்வி பற்றிருக்கலாம். ஏற்கனவே இந்த தீவில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தினை சீனா மேற்கொள்வதாக வெளியானதை அடுத்து பல கேள்விகள்,சர்ச்சைகள் எழுந்தன.
பல நாடுகளும் தங்கள் நாட்டின் இறையாண்மை தன்மையை பாதுகாக்கும் விதமாக சீன நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகின்றன. அப்படி இருக்கையில் இது எதற்காக? இது உண்மையா என்ற பல கேள்விகளை எழுப்பின.
ஆனால் இதனை உறுதிபடுத்தும் விதமாக தற்போது சாலமன் தீவு முழுக்க 161 தொலைத் தொடர்பு கோபுரங்களை ஹூவாய் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்!

சாலமனுக்கு சீனா உதவி
சீனாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன ஹுவாய் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய தொகைக்காக, சீனாவிடம் 66 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தாய்வானுடனான பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தீவு நாடு சீனாவில் இருந்து பெற்ற முதல் முதலீடு என்றும் கூறப்படுகிறது.

வரலாற்று ரீதியான ஒப்பந்தம்
2019-ம் ஆண்டுக்கு பிறகு சீனாவுடனான உறவினை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த முதலீட்டு ஒப்பந்தம் ஒரு வரலாற்று ரீதியான ஒப்பந்தம் எனவும் சாலமன் தீவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சாலமன் தீவில் இந்த முடிவானது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ தளம் அமைக்கலாம்?
மேற்கத்திய நாடுகள், சீனா இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ராணுவ தளத்தினை அமைக்க பயன்படுத்தலாம். இதற்காக இந்த தீவு நாட்டின் பிரதம மந்திரி மனாசே சோகவாரே பலமுறை மறுத்து வந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் சீனா, சாலமன் நாட்டுடனான ஒப்பந்தத்தில் புதிய கடற்படை தளத்தினை அமைக்கவுள்ளதாகவும், இது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன

மனாசேவின் மறுப்பு
ஆனால் இதனை மறுத்த மனாசே, சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது உண்மை தான். அதற்காக சீனா கடற்படை தளம் எல்லாம் அமைக்காது. அப்படி ஒரு நெருக்கடியும் நமக்கு ஏற்படவில்லை.
நமது நாடு இறையாண்மை தன்மை கொண்ட ஒரு, சுதந்திரமான நாடு. நம்மை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் மட்டுமே. நமது நாடு தான் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள சீனாவைக் கேட்டுக் கொண்டது. நம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறினார்.

சர்ச்சை
எனினும் சீனாவுடன் சாலமன் தீவுகள் நெருங்கி வருவதை அந்த நாட்டிலேயே பலரும் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு இறுதியில் பெரும் வன்முறை வெடித்தது. சீனாவுடன் தொடர்பில் உள்ள உள்ள சில வர்த்தக நிறுவனங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
China’s Huawei signs $66 million loan deal for Solomon Islands
China’s Huawei signs $66 million loan deal for Solomon Islands/சாலமன் தீவில் சீனாவின் விளையாட்டு ஆரம்பம்.. எவ்வளவு கடன் கொடுக்க போகுது.. எதற்காக!