
எப்போது திருமணம் : கவுதம் கார்த்திக் பதில்
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அதன் பிறகு வை ராஜா வை, தேவராட்டம் என பல படங்களில் நடித்தவர் தற்போது 1947 படத்தை அடுத்து பத்து தல என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்தது நடித்து வருகிறார். இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகின. பின்னர் அந்த செய்தியை மறுத்திருந்தார் மஞ்சிமா. ஆனால் அப்போது அதுகுறித்து கவுதம் கார்த்திக் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பேட்டியில் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் மஞ்சிமா மோகனா? இல்லை வேறு பெண்ணா? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.