கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் மோசஸ்(18). இவருக்கு பெற்றோர் இல்லாததால், கடலூர் மாவட்டம் கணிசப்பாக்கம் பகுதியில் உள்ள தாய் மாமன் வீட்டில் தங்கி, மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்பொழுது மழை பெய்ததால் தரை வழிக்கு உள்ளது. மோசஸ் கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின்கம்பத்தின் எர்த் கம்பியை பிடித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பண்ருட்டி காவல்துறையினர், உயிரிழந்த மோசஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.