
இந்த முறை மிஸ் ஆகாது – விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்தபடம் இப்போது ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இந்தபடம் குறித்து விக்ரம் கூறுகையில், ‛‛கோப்ரா படத்தில் 7 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன். இவை கதைக்கு தேவையானதாக இருக்குமே தவிர திணிக்கப்பட்டதாக இருக்காது. இந்த படத்திற்காக நீண்டகாலமாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது. நிச்சயம் தியேட்டர்களில் வரும். அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகிறது'' என்றார்.
கோப்ரா படம் ஆக.,31ல் திரைக்கு வருகிறது.