நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடத்தை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி இதை வெடி வைத்து தகர்ப்பதற்கான ஏற்படுகள் மும்முரமாக நடக்கிறது. இதற்காக 3,500 கிலோ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்படும் நாளன்று காலை 7.30க்குள், அதை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேரை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள 2500 வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட உள்ளது. 2 கட்டிடமும் மாலை 2.30க்குள் தகர்க்கப்பட இருக்கின்றன.
