சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் மொத்தம் 8.7 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.2.17 கோடி வருவாய் கிடைத்தது. இதுபற்றி சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நட்ராஜ் கூறியதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் 8.71 லட்சம் கொடிகள் விற்பனையாகின. இதில், அதிகபட்சமாக சென்னை நகர மண்டலத்தில் 2.74 லட்சம் கொடிகளும், மத்திய மண்டலத்தில் 2.32 லட்சம், மேற்கு மண்டலத்தில் 1.87 லட்சம், தெற்கு மண்டலத்தில் 1.76 லட்சம் கொடிகள் விற்பனையாகின.
இதன்மூலம் ரூ.2.17 கோடி வருவாய் கிடைத்தது. சென்னை நகரமண்டலத்துக்கு மட்டும் ரூ.68.73 லட்சம் வருவாய் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.