மனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்துடன் முக்கிய தொடர்பை கொண்டுள்ளது.
சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை சிறுநீர் கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.
இது அனைத்தும் அவர்கள் எவ்வளவு தண்ணீர் அல்லது பானங்களைக் குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும்.
thehealthsite
ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீர் குறைவாக உற்பத்தியாக காரணங்கள் என்னென்ன?
உடல் வறட்சி, தொற்றுகள், சிறுநீரக பாதை சுருக்கம், குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள், சிறுநீரக பிரச்சனைகள்.