போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆர்.டி.ஓ., வீட்டில் ரெய்டு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர் வருமானத்திற்கு அதிகமாக 550 மடங்கு சொத்து சேர்த்திருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.போபாலில் வசிப்பவர் சந்தோஷ் பால். வட்டார போக்குவரத்து அலுவலராக உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போபாலின் புறநகர் பகுதியில் உள்ள இவர் வீட்டிற்கு ரெய்டு சென்றனர்.
முன்பக்கம் சாதாரண பங்களா தோற்றத்துடன் இந்த வீட்டில் நுழைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கதவை திறந்து உள்ளே சென்றதும் அங்கு 6 சொகுசு பங்களாக்கள் இருந்துள்ளன. 2 சொகுசு கார்கள், அதி நவீன திரையரங்குகள், பண்ணை வீடு, பிரம்மாண்ட நீச்சல் குளம் என 10 ஆயிரம் சதுர அடியில் இருந்த வீடு ரெய்டுக்கு வந்தவர்களை தலைசுற்ற வைத்தது.
பெரும் தொழிலதிபர் வீடுகளுக்கு இணையான அந்த வீட்டில் 20 மணி நேர சோதனை நடத்தி 16 லட்சம் ரொக்கம், 2 சொகுசு கார்கள், ஏராளமான நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 550 மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement