உங்க மொபைலில் இருந்து பணத்தை திருடும் 35 Malware App, உடனே Uninstall பண்ணுங்க!

சமீபத்தில் தான் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நான்கு செயலிகள் இது போன்று இணைய குற்றங்களில் ஈடு பட்டதற்காக நீக்கப்பட்டது. இந்நிலையில் இணைய குற்றங்கள் புரியும் செயலிகளை கண்டறியும் cybersecurity நிபுணர் குழு ஒன்று சமீபத்தில் மேலும் 35 செயலிகள் நூதன முறையில் பயனாளர்களின் பணத்தை திருடுவதாக கண்டறிந்துள்ளனர்.

மில்லியன் கணக்கான பயனாளர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே பயனாளர்கள் கீழ்கண்ட செயலிகளை தங்கள் மொபைல் போன்களில் வைத்திருந்தால் உடனடியாக delete செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த செயலிகள் உங்கள் மொபைலில் பதிவிறக்கப்பட்ட பிறகு தன்னுடைய icon மற்றும் பெயரை மாற்றி கொள்வதால் பயனாளர்களால் அவற்றை அடையாளம் காண முடிவதில்லை. எனவே அவற்றை அழிக்கும் போது கவனமாக பார்த்து செய்ய வேண்டும்.குறிப்பாக அவை மொபைலில் இருக்கும் settings icon போலவே மாறி கொள்ளும். எனவே இரண்டு settings icon-ஐ பார்த்தால் அதில் எது போலி என்பதை கண்டுபிடித்து அழித்து விடவும்.

பொதுவாக செயலிகள் வழியாகவோ அல்லது மெசேஜ்கள் வாயிலாகவோ நமது மொபைல் போன்களில் maleware-ஐ ஏற்றி பல வகையான இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். அது கூகுள் ப்ளே ஸ்டாரால் கண்டுபிடிக்க பட்டால் உடனடியாக செயலி நீக்கப்படும் என்பதால் தற்போது இந்த செயலிகள் விளம்பரங்கள் வழியாக maleware-ஐ புகுத்தி பயனாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் வேலையை செய்கின்றன.

எனவே கீழ்கண்ட செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக delete செய்து விடுங்கள்.

Walls light – Wallpapers PackBig Emoji – Keyboard – 100KGrad Wallpapers – 3D BackdropsEngine Wallpapers – Live & 3DStock Wallpapers – 4K & HD EffectMania – Photo EditorArt Filter – Deep Photo effectFast Emoji KeyboardCreate Sticker for WhatsappMath Solver – Camera HelperPhotopix Effects – Art FilterLed Theme – Colorful KeyboardKeyboard – Fun Emoji, StickerSmart WifiMy GPS LocationImage Warp CameraArt Girls Wallpaper HDCat SimulatorSmart QR CreatorColorize Old PhotoGPS Location FinderGirls Art WallpaperSmart QR ScannerGPS Location MapsVolume ControlSecret HoroscopeSmart GPS LocationAnimated Sticker MasterPersonality Charging ShowSleep SoundsQR CreatorMedia Volume Slider Secret AstrologyColorize PhotosPhi 4K Wallpaper – Anime HD
மேல் குறிப்பிட்டுள்ள இந்த செயலிகள் google-ஆல் தடை செய்யப்பட்டுள்ளன. Settings >Apps >Manage வழியாக சென்று இந்த செயலிகளை கண்டறிந்து அழித்து விடுங்கள்.

– சுபாஷ் சந்திர போஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.