U.S. Open 2022 TAMIL NEWS: ஆண்டுதோறும் நடத்தப்படும் டென்னிஸ் தொடர்களில் அமெரிக்க ஓபன் (U. S. Open) தொடரும் ஒன்று. இத்தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 60 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 479 கோடி ரூபாய் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு (2.6 மில்லியன் டாலர்கள்)சுமார் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. தவிர, மெயின் டிராவுக்கு மட்டும் 6 கோடி ரூபாய் ($80,000) வழங்கப்படும் மற்றும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள் 9 கோடி ($121,000) பெறுவார்கள் என்றும் யு.எஸ். டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர்களுக்கு 3.9 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. முதல் சுற்றில் தோல்வியடைந்தவருக்கு 58,000 டாலரும், இரண்டாவது சுற்றில் வெளியேறியவருக்கு 1,00,000 டாலரும் கொடுக்கப்பட்டது.
மேலும், காலிறுதிக்குமுன்னேறியவர்களுக்கு 4,45,000 டாலரும், அரையிறுதிக்கு சென்றவர்களுக்கு 7,05,000 டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கு 1.3 மில்லியன் டாலரும் கொடுக்கப்பட்டது. இரட்டையர் சாம்பியன்ஷிப் அணிகள் ரூ.6,88,000 கொடுக்கப்பட்டது.
புதிய உச்சம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் வழங்குப்படும் 60.1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை, கடந்த ஆண்டு விட 57.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும் இது இந்த ஆண்டில் நடந்தப்பட்ட மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விட ஏற்கனவே அதிகமாகும்.
தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை இப்போது 6.26 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இறுதிச் சுற்று பரிசுத் தொகை 44,000 டாலராக இருக்கிறது.
இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் 52 மில்லியன் டாலரும், விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் தொடர்களில் 49 மில்லியன் டாலரும் பரிசுத்தொகையாக செலவு செய்யப்பட்டது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil