சென்னை; அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகஅரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். தொடர்ந்து, முதலமைச்சருடன் அலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் மத்தியஅரசு பங்களிப்புதுடன் ஸ்மார்ட்டி சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உட்பட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அது, சென்னை வெள்ளத்தின்போத நிரூபணமானது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்தகுழு மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், விசாரணை நடத்தியும் வந்தார். அதைத்தொடர்ந்து தனது ஆய்வு அறிக்கையை இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.