இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் டாக்சி சேவையில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்ற புகார்கள் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.
குறிப்பாக இரவு நேர டிரிப், ஏர்போர்ட் பிக் அப், டிராப் டிரிப்புகள் போன்றவற்றுக்கு ஆயிரக் கணக்கில் பணத்தை வசூலிப்பதாக மக்கள் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு டிரென்டாகி வருகிறது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் விளைவு வேற லெவல் சம்பவம்.
மின்சார நிலுவை தொகை: ஓரே நாளில் 80% சரிவு.. தமிழ்நாட்டின் நிலை என்ன..?!
ஹைதராபாத்
ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றம், ஓலா கேப்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்ததற்காகவும், சேவை குறைபாடுகளுக்காகவும் ரூ.95,000 செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜபேஸ் சாமுவேல்
ஜபேஸ் சாமுவேல் என்பவர் 4-5 கிமீ பயணத்திற்கு ரூ.861 செலுத்தியுள்ளார், ஆனால் இந்தப் பணத்திற்கு 200 ரூபாய்க்கு மேல் செலவாகக் கூடாது என்று புகார் அளித்துள்ளார். அக்டோபர் 19, 2021 ஆம் தேதி ஜபேஸ் சாமுவேல் என்பவர் தானும், தனது மனைவியும் பயணம் செய்ய நான்கு மணிநேரத்திற்கு ஓலா கேப் புக் செய்யப்பட்டு உள்ளது.
ஓலா டிரைவர்
புக் செய்யப்பட்ட கார் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதை, டிரைவர் ஏசியை ஆன் செய்ய மறுத்தது மட்டுமின்றி அவர்களிடம் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார் என்றும் ஆயினும் கேப்-ஐ கேன்சல் செய்யாமல் 4-5 கி.மீ தூரம் பயணித்துள்ளதாக ஜபேஸ் சாமுவேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஓலா கேப்ஸ்-யிடம் புகார்
சாமுவேல், ஓலா கேப்ஸ் நிறுவனத்திடம் அதிகப்படியான பில் புகார் அளித்ததாகவும், ஆனால் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை தலையிடத் தவறியதாகவும் கூறினார். மேலும் பில் தொகையான ரூ.861 ரூபாய் கட்டணத்தைச் செலுத்துமாறு ஓலா நிர்வாகிகள் பலமுறை அழைப்பு விடுத்ததாக அவர் கூறினார்.
நுகர்வோர் நீதிமன்றம்
அவர் ஜனவரி 2022 இல் பில் செலுத்தினார், ஆனால் இந்த அநியாயத்திற்கு, நியாயத்தைப் பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார் சாமுவேல். ஓலா நிறுவனத்திற்குப் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும், இவ்வழக்கு தொடர்பாக ஓலா கேப்ஸ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.
இழப்பீடு, கோர்ட் செலவு
இந்த வழக்கின் விசாரணையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.88,000 இழப்பீடும், விசாரணைச் செலவாக ரூ.7,000ம் வழங்குமாறு ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. இந்தத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டும் உள்ளது, இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ரீபண்ட்
இழப்பீடு, கோர்ட் செலவு மட்டும் அல்லாமல் பயணத்தின் தேதியிலிருந்து பேமெண்ட் செய்யும் நாள் வரையில் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சேர்த்து 861 ரூபாயை ஜபேஸ் சாமுவேல்-க்கு திரும்ப அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Hyderabad consumer court ordered to pay Ola Cabs Rs 95,000 compensation for over charging customer
Hyderabad consumer court ordered to pay Ola Cabs Rs 95,000 compensation for over charging customer Ola: ரூ.600-க்கு ஆசைப்பட்டு 1 லட்சம் அபராதம்.. ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவு..!