இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து நேற்று நடந்த 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
‘செம’ கேட்ச் பிடித்த பிராட்
இந்த ஆட்டத்தில், உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வரும் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அசத்தலான கேட்ச் பிடித்து மிரட்டியுள்ளார். 36 வயதான அவர், ஒரு குயிக் ஜம் செய்து ஒரு கையில் கேட்ச் பிடிக்கிறார். பின்னர் பேக் டைவ் அடித்து எழுந்து விடுகிறார்.
தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸின் 78வது ஓவரில் மேத்யூ பாட்ஸின் பந்து வீச்சை ரபாடா ஒரு புல் ஷாட் அடிக்க முயன்றார். அவர் வேகமாக மட்டையை சுழற்றி அடித்த அந்த பந்து பவுண்டரியை நோக்கி பறந்து கொண்டிருந்தது. ஆனால், மிட்-ஆனில் நின்றுகொண்டிருந்த ஸ்டூவர்ட் பிராட், ஒரு அபாரமான கேட்சை எடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்து அணியின் மூத்த பந்துவீச்சாளரைப் பாராட்டி வருகின்றனர்.
A stunner from Stuart Broad. pic.twitter.com/euiisyokJY
— Johns. (@CricCrazyJohns) August 19, 2022
பிரமாண்ட சாதனை படைத்த பிராட்
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் இந்த ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் (லார்ட்ஸ்) 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மூன்று வெவ்வேறு மைதானங்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் கொழும்பு (156), கண்டி (117), மற்றும் காலி (111) ஆகிய மைதானத்தில் இந்த சாதனையை படைத்து இருக்கிறார். மற்றொரு இலங்கை ஜாம்பவானான ரங்கனா ஹார்த் காலேயில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil