சீன நிறுவனங்களின் செயலிகள் தன்நாட்டு மக்களின் தனிநபர் தரவுகளைத் திருடுவது மட்டும் அல்லாமல் சேவை அளிக்கும் பிற நாடுகளிலும் தனிநபர் தரவுகளைத் திருடி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு இந்தியா, உட்படப் பல நாடுகள் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிக்டாக் முக்கியமான பிரச்சனையில் சிக்கியுள்ளது.
டிக்டாக் செயலி அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டிக்டாக் தனது செயலியில் புதிதாகச் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகவும், அது சாமானிய மக்களின் தனிநபர் தரவுகளைப் பெரிய அளவில் திருட வழிவகுத்துள்ளதாகவும் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா நிறுவனத்துக்கு பெருத்த அடி.. அடுத்தடுத்து சரியும் சீன சாம்ராஜ்ஜியங்கள்!
டிக்டாக் நிறுவனம்
டிக்டாக் நிறுவனம் புதிதாகத் தனது செயலியில் மென்பொருள் கோட்-ஐ சேர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் டிக்டாக் நிறுவனத்தால் ஒருவர் தனது செயலியில் எதை டைப் செய்கிறார், எந்த 3ஆம் தரப்பு இணையத் தளத்தைப் பயன்படுத்துகிறார், இணையத் தளங்களின் பாஸ்வோர்டு, இணையத்தில் பயன்படுத்துக் கிரெடிட் கார்டு நம்பர் உட்பட அனைத்து தரவுகளையும் கண்காணிக்கவும், பார்க்கவும் முடியும் என இணையப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செக்யூரிட்டி ரிசர்சர் பெலிக்ஸ் க்ராஸ்
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் விரைவில் டிக்டாக் பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தச் செக்யூரிட்டி ரிசர்சர் பெலிக்ஸ் க்ராஸ் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தரவுகள் அனைத்தையும் டிக்டாக் செயலியில் இருக்கும் in-app browsing feature வாயிலாக டிக்டாக் நிறுவனம் கண்காணிப்பதாகத் தனது ப்ளாக் பதிவில் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் மறுப்பு
இதை டிக்டாக் நிறுவன தரப்பில் இருந்து மறுத்தாலும், பெலிக்ஸ் க்ராஸ் தொடர்ந்து எதிர் வாதங்களை வைத்து வருகிறார். ஏற்கனவே டிக்டாக் தனது வாடிக்கையாளர் தரவுகளை அமெரிக்காவில் சேமிக்காமல் சீனா சேமித்தும் இயக்கியும் வருகிறது எனக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்களாகச் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த வாதங்களை ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்
இந்நிலையில் ஜூன் மாதம் அமெரிக்காவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து TikTok அகற்றப்பட வேண்டும் என்று ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் உள்ள குடியரசுக் கட்சி ஆணையர் பிரெண்டன் கார் (Brendan Carr), ஆப்பிள் மற்றும் கூகுள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வேண்டுகோள் விடுத்தார். டிக்டாக் நிறுவனத்தின் கூட்டத்தில் இருந்து கசிந்த 12க்கும் அதிகமான பதிவுகள் அமெரிக்க டிக்டாக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
டிக்டாக் மீட்டிங்
டிக்டாக்-கின் அமெரிக்க ஊழியர்கள், அமெரிக்கப் பயனர்களின் தரவு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் சீனாவில் உள்ள தங்கள் சக ஊழியர்களிடம் தான் கேட்க வேண்டிய நிலை உள்ளது என ஜூன் மாதம் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
TikTok in-app browser could see data like passwords and credit card numbers says Felix Krause
TikTok in-app browser could see data like passwords and credit card numbers says Felix Krause டிக்டாக்-ல் புதிய மாற்றம்.. அமெரிக்கர்கள் அச்சம்..!