ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காலத்திலிருந்து வெற்றிக்கொடியை நாட்டி வருபவர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். பல்வேறு எதிரிகள் சூழ்ந்த போதிலும் அசராமல் அவர்களை கையாண்டு வருகிறார்.
இந்நிலையில் எப்படியாவது பாஜக தெலுங்கானாவை கைப்பற்றிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் உள்ளது. அதற்கான முயற்சியையும் பல்வேறு வகைகளில் எடுத்து வருகிறது. இந்த சூழலில் பாஜவை சிபிஐயும் எதிர்த்து வருகிறது. இது குறித்து பேசிய தெலுங்கானா சிபிஐ தலைவர் சடா வெங்கட் ரெட்டி
“முனுகோடு இடைத்தேர்தலில் சந்திர சேகர ராவின் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். பாஜக இங்கு ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது, அதற்காக மத்திய அரசின் அதிகாரத்தையும் பணத்தையும் பயன்படுத்துகிறது. பாஜக மதவாத கட்சி, அதை தோற்கடிக்க, டிஆர்எஸ் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்று சிபிஐ தலைவர் சடா வெங்கட் ரெட்டி கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் மட்டுமின்றி, நாட்டிலும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர எங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கேசிஆர் கூறியுள்ளார். பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற அரசியல் அதிரடி திருப்பங்கள் நாடு முழுவதும் நடந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. தேர்தல் இன்னும் நெருங்கும் நேரத்தில் இன்னும் பல அதிரடி சூழல்களுக்கு நாம் தயார இருக்க வேண்டும். இது தற்காலிக ஆதரவா அல்லது எதிர்கால கூட்டணிக்கு முன்னேற்பாடா என பொறுத்து பார்ப்போம்…