எல்லோருக்குமே கோடீஸ்வரர் ஆகும் கனவு இருக்கும். எல்லோராலும் எப்படி கோடீஸ்வரர் ஆகமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு மியூச்சுவல் ஃபண்டில் ஒரு ஃபார்முலா இருக்கிறது. 15X15X15 என்பதுதான் அந்த ஃபார்முலா.
அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால், மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டத்தில் ஆண்டுக்கு 15% வருமானம் எனக் கணக்கிட்டால் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.
இதில் மாதம் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்வது எல்லோராலும் முடியாது. ஆனால், ஒரு கோடி ரூபாய் ஈட்டுவதை நீங்கள் உறுதி செய்து கொண்டால் உங்களால் முடிந்த தொகையை மாதந்டோறும் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்கிற தொகைக்கு ஏற்ப முதலீட்டுக் காலம் மட்டும் அதிகமாகும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தையில் பணவீக்கத்தைத் தாண்டியும் நல்ல வருமானத்தை நம்முடைய முதலீட்டின் மூலம் பெறமுடியும்.
நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய நிதி இலக்குகளுக்கு ஏற்ப பணத்தைக் கையாள்வதன் மூலம் எளிதில் செல்வத்தை பெருக்க முடியும்.
அதற்கு முதலில் பணத்தைப் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தைப் பெருக்குவதற்கு அதை சேமிக்க வேண்டுமா, முதலீடு செய்ய வேண்டுமா, யாருக்கு எந்த முதலீடு சரியானது, இதுபோன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் உங்களுக்காக வழங்க நிபுணர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சியை நெல்லையில் ஹோட்டல் ஆர்.ஆர்.இன்-ல் செப்டம்பர் 4-ம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடத்த உள்ளது. சிறப்புரை பட்டிமன்றப் பேச்சாளர் சௌந்தர மகாதேவன் வழங்க உள்ளார்.
நிதி ஆலோசகர்கள் பி.வி.சுப்ரமணியம் மற்றும் வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். நெல்லை மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையலாம். கலந்துகொள்ள பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla