உலகின் மிகப்பெரிய நன்கொடை நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் டிரஷரர் குழுவில் இந்தியாவின் பிரபலமான நன்கொடையாளரான ஆஷிஷ் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் டிரஷரர் குழுவில் இரண்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்..? 12.4 டிரில்லியன் டாலர்..!
புதிய தலைவர்கள்
ஆஷிஷ் தவான் கன்வர்ஜென்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், மேலும் அவருடன், அமெரிக்காவின் ஸ்பெல்மேன் கல்லூரியின் தலைவரான டாக்டர் ஹெலன் டி கெய்ல் ஆகிய இருவரும் டிரஷரர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷிஷ் தவான்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் கன்வர்ஜென்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், 53 வயதான ஆஷிஷ், அசோகா பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் இலாப நோக்கற்ற அமைப்பான சென்ட்ரல் ஸ்கொயர் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.
டாக்டர் ஹெலின் டி கெய்ல்
மறுபுறம், டாக்டர் ஹெலின் டி கெய்ல் கேட்ஸ் அறக்கட்டளையின் முன்னாள் ஊழியர் ஆவார். ஸ்பெல்மேன் கல்லூரியின் தலைவராவதற்கு முன்பு, அமெரிக்காவின் பழமையான அமைப்புகளில் ஒன்றான தி சிகாகோ சமூக அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக டாக்டர் கெய்ல் பணியாற்றி இருந்தார்.
ஆஷிஷ் தவான் மற்றும் ஹெலின் டி கெய்ல்
புதிய வாரிய உறுப்பினர்கள் இருவரும், உயிர்களைக் காப்பதிலும், சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும் அறக்கட்டளை மானியங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கேட்ஸ் அறக்கட்டளை
கேட்ஸ் அறக்கட்டளை 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு மற்றும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், விவசாய மேம்பாடு மற்றும் நிதி அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் புதிய குழு உறுப்பினர்களின் இணைத் தலைவர்களான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், CEO மார்க் சுஸ்மான், மேலும் பலருடன் ஆஷிஷ் தவான் மற்றும் ஹெலின் டி கெய்ல் இணைந்து பணியாற்றுவார்கள்.
ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் புதின்.. ரஷ்யா திடீர் அறிவிப்பு..!
Bill & Melinda Gates Foundation Appoints Indian Ashish Dhawan To Board Of Trustees
Bill & Melinda Gates Foundation Appoints Indian Ashish Dhawan To Board Of Trustees பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் புதிய இந்திய தலைவர்.. யார் இந்த ஆஷிஷ் தவான்..?