ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்திய அணி ஆறு ஆண்டுக்குப் பின் ஜிம்பாப்வே சென்றது. ஹராரேயில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இன்று இரண்டாவது போட்டி நடந்தது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் சகாருக்கு ஓய்வு தரப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். ஜிம்பாப்வே அணியில் ரிச்சர்டு, மருமானி நீக்கப்பட்டு, கைட்டனோ, சிவாங்காவுக்கு வாய்ப்பு தரப்பட்டன.ஜிம்பாப்வே அணிக்கு கைட்டனோ (7), இன்னொசன்ட் (16) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. வெஸ்லே, கேப்டன் சகபவா தலா 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சிக்கந்தர் ராஜா 16 ரன் எடுத்தார். பின் இணைந்த சீன் வில்லியம்ஸ் (42), ரியான் பர்ல் ஜோடி அணியை மீட்க முயற்சித்தது.
பின் வரிசையில் ஜாங்வே (6), ஈவன்ஸ் (9), சிவாங்கா (0) வெளியேற, ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். தவான் 33, இஷான் கிஷான் 6, சுப்மன் கில் 33 ரன் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்னில் போல்டானார். இந்திய அணி 25 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 16 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சஞ்சு சாம்சன் (43), அக்சர் படேல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரை 2-0 என கைப்பற்றியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement