வருகின்ற 31 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட விநாயகர் பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. விநாயகர் சிலை தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் கரைக்க வேண்டிய விதிமுறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலையை கரைக்க தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் அறித்துள்ள விதிமுறைகள் :
1.பிளாஸ்டிக் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.
2.மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
3.சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் பயன்படுத்தலாம்.
4.சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் பயன்படுத்த கூடாது.
5.விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.