ரஷ்யாவின் அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனமான Gazprom, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 2 க்கு இடையில் மூன்று நாட்களுக்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் செய்யும் Nord Stream 1 பைப்லைனை மூடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Nord Stream 1 பைப்லைனுக்குத் திட்டமிடப்படாத பராமரிப்புத் தேவைப்படுவதாக அறிவித்து Gazprom 3 நாட்களுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்த உள்ளது. இதேபோல் Gazprom நிறுவனம் பைப்லைனில் பிரச்சனைகள் கண்டறியப்படவில்லை என்றால் வழக்கம் போல் எரிவாயு சப்ளை தொடரும் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.
இயற்கை எரிவாயு
ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலை ஏற்கனவே வரலாற்று உச்சத்தை நெருங்கியுள்ள வேளையில் Gazprom நிறுவனத்தின் அறிவிப்பு ஐரோப்பிய சந்தையில் கட்டாயம் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
ஐரோப்பாவின் டச்சு TTF
இதன் எதிரொலியாக ஐரோப்பாவின் டச்சு TTF ஃபியூச்சர்ஸ் விலையானது வெள்ளிக்கிழமை சுமார் 2 சதவீதம் அதிகரித்து 262 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தது. இதன் விலை கடந்த ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 19% உயர்ந்துள்ளது.
Nord Stream 1 பைப்லைன்
Nord Stream 1 பைப்லைன் அதன் திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பின் ஒரு பகுதியாகக் கடந்த மாதம் 10 நாட்களுக்கு மூடப்பட்டது. ஆனால் Gazprom முன்பு தொழில்நுட்ப பிரச்சனைகளைக் காரணம் எரிவாயு விநியோ அளவை வெறும் 20 சதவீதமாகக் குறைத்தது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடுத்த பின்பு ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா எரிசக்தியை ஆயுதமாக்கப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளைப் பந்தாடி வருகிறது. இதைப் பல ஐரோப்பிய தலைவர்கள் 10 நாட்கள் மூடப்பட்ட போதே குற்றம்சாட்டிய நிலையில் தற்போது மீண்டும் 3 நாட்கள் மூட முடிவு செய்துள்ளது.
ரஷ்யா எரிவாயு
ஐரோப்பா ரஷ்யா எரிவாயுவை நம்பியிருக்கும் வேளையில் சப்ளை குறுக்கீடுகள் மற்றும் சப்ளை ரத்துக்கள் ஐரோப்பிய நாடுகளை மாற்று எரிசக்தி ஆதாரங்களை நாடவும், குளிர்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே எரிவாயுவை மக்களுக்கு அளந்து அளந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தைச் சமாளிக்க மக்களுக்கு வெப்ப மூட்டும் தேவையான எரிவாயுவைச் சேமிக்க அந்நாடுகள் திட்டமிட்டு இருக்கும் வேளையில், ரஷ்யா திட்டமிட்டு இயல்பாக கிடைக்கக் கூடிய எரிவாயுவையும் தடுத்துள்ளது. இதனால் ஜெர்மனி உபரியாகச் சேமித்து வைக்க முடியாது.
உஷாரான உலக நாடுகள்
இதனால் ஐரோப்பா வேறு வழி இல்லாமல் தொடர்ந்து ரஷ்யாவை நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பிய எரிவாயு விநியோகங்களில் ரஷ்யாவின் முடிவு வெட்டுக்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கியது மட்டும் அல்லாமல் உலக நாடுகள் போதுமான எரிவாயு-வை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
Russia’s Gazprom shutting Nord Stream 1 gas pipeline for 3 days; big trouble for germany
Russia’s Gazprom shutting Nord Stream 1 gas pipeline for 3 days; big trouble for germany ஜெர்மனி-வை பந்தாடும் விளாடிமிர் புதின்.. ரஷ்யா திடீர் அறிவிப்பு..!