முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முட்டை ஒன்றின் நிர்ணய விலை 43 ரூபா என்று அறிவிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.