சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் கரோலின் கார்சியா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சீனாவின் ஷாங் சூவாயுடன் மோதினார். இந்த போட்டியில் சபலெங்கா 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஷாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
Related Tags :