ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
விளையாடிய 16 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் உலக சாதனைப் படைத்தார் தீபக் ஹூடா
இந்திய அணிக்காக விளையாடும் இளம் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா உலக கிரிக்கெட் விளையாட்டில் வித்தியாசமான உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
BCCI
இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தனது இன்னிங்ஸில் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஜிம்பாப்வே அணியில் ஷான் வில்லியம்ஸ் 42 ஓட்டங்களையும், ரியான் பர்ல் 39 ஓட்டங்களையும் மற்றும் இன்னசன்ட் கையா, ரஸா ஆகியோர் தலா 16 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.
162 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 25.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 167 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பேட் செய்து ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்கள் சேர்த்தார். ஷிகர் தவண், சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்களையும், தீபக் ஹூடா 25 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா உலக கிரிக்கெட் போட்டிகளில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து தீபக் ஹூடா தொடர்ச்சியாக விளையாடியுள்ள 16 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றள்ளது.
ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகள் என தீபக் ஹூடா விளையாடிய மொத்தம் 16 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்த சாத்விக் நடிகோட்லா என்ற வீரர் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லொறி…32 பலி: துருக்கியில் பயங்கரம்
மேலும் தீபக் ஹூடாவின் இந்த உலக சாதனையின் மூலம் இந்திய அணியின் லக்கி சார்ம் ஆகிவிட்டார்.