இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலியாகினர்.

Recommended Video

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வருவதால், ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

     வெளுத்து வாங்கிய மழை

    வெளுத்து வாங்கிய மழை

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால், பல்வேறு ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு பெற்றதால் குறிப்பிட்ட இடங்களில் மலைச்சரிவும் ஏற்பட்டது. இதில் மாநிலத்தின் காங்க்ரா, மாண்டி, ஹமீர்பூர் மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்தது.

     வெள்ளம், நிலச்சரிவு

    வெள்ளம், நிலச்சரிவு

    இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்கள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கி அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தது.

     22 பேர் பலி

    22 பேர் பலி

    இதில் மண்டியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இதேபோல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், மலைச்சரிவில் சிக்கியும் இங்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் மாண்டியாவில் மட்டும் 13 பேர் பலியாகினர். இதேபோல் காங்க்ரா, ஹமீர்பூர் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 9 பேர் பலியாகினர். ஒரே நாளில் பெய்த கனமழையால் மாநிலத்தில் 22 பேர் பலியாகினர்.

     743 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

    743 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

    இதேபோல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நிலச்சரிவின் காரணமாக மாநிலத்த்ல் உள்ள பல சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், பல சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பபட்டுள்ளது. குறிப்பாக மாண்டி மாவட்டத்தில் உள்ள மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகத் நெடுஞ்சாலை உட்பட 743 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    Source Link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.