பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பயனர்கள் விவரங்களை விற்று காசு பார்க்கின்றன எனக் கூறி வந்த நிலையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தங்களது பயனர்கள் விவரங்களை விற்று 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்காக ஆகஸ்ட் 29-ம் தேதி வரை ஒப்பந்த தாரர்கள் தங்களது புள்ளி விவரங்களை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதில் ஐஆர்சிடிசி பயனர்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, மின்னஞ்சல் முகவரி, அவர்கள் பயணம் செய்யும் வழித்தடம், பரிவர்த்தனை முறை, கடவுச்சொல் உள்ளிட்டவையும் அடங்கும் என்ற கூறப்படுகிறது.
விளக்கம்
ஐஆர்சிடிசி தரப்பில் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று கருத்துக் கேட்ட போது இரண்டு திட்டங்களாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் அவை ஐஆர்சிடிசி பயணிகள் விவரங்களை விற்க அல்ல. அவற்றை எப்படி வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்கலாம் என ஆராய மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது.
திட்டம் 1
ஐஆர்சிடிசி பயணிகளின் விவரங்களை ஆராய்ந்து அவற்றை எப்படிப் பணமாக்குவதற்கான வணிக மாதிரியை அடையாளம் காணுவது என்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதாகும்.
திட்டம் 2
வணிக மாதிரி உருவான பிறகு அவற்றை எப்படிக் கண்டுபிடித்து, வடிவமைத்து, செயல்முறைப் படுத்துவது என்பதற்கான ஒப்பந்தங்களை ஐஆர்சிடிசி கோரியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டில் ஒன்று அல்லது இரண்டுக்கும் ஒப்பந்த தாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
சர்ச்சை
இந்தியாவில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா 2019 இன்னும் முழுமையாகத் தக்கல் செய்யப்படாத நிலையில், ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள இந்த டெண்டர் விண்ணப்ப விவரங்கள் ரயில் பணிகள் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவரங்கள் தரவு பாதுகாப்பு மசோதா தக்கல் முழுமையாகச் சட்டமாகும் வரை வழங்கப்படாது எனவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
பங்கு நிலவரம்
ஐஆர்சிடிசி பங்குகளின் சந்தை மூலதனம் 58,808 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு பங்கின் விலை 735 ரூபாயாக தற்போது உள்ளது. 2019-ம் ஆண்டு முதல் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட ஐஆர்சிடிசி முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபம் அளித்து வரும், நம்பிக்கை பெற்ற நிறுவனமாகவும் உள்ளது.
IRCTC May Monetise Passenger Data Soon. How?
ஐஆர்சிடிசி பயணிகள் விவரங்களை தனியாருக்கு விற்க முடிவு.. என்ன விலை தெரியுமா? | IRCTC May Monetise Passenger Data Soon. How?