மஹாராஷ்டிராவில் டாக்டர் மற்றும் ஊழியர்கள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெளியே பிரசவம் ஆன குழந்தை இறந்தது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சிவசேனா – பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு யவத்மால் மாவட்டம் விதுல் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து உமர்கெட் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து வரப்பட்டார்.
ஆனால் அங்கு டாக்டர் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை. வராண்டாவிலேயே வலியால் துடித்த அந்தப் பெண்ணுக்கு அங்கேயே குழந்தை பிறந்து சற்று நேரத்தில் உயிரிழந்தது.உடனே பெண்ணின் தந்தை மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்தார். இதுகுறித்த விசாரித்த மாவட்ட மருத்துவ அதிகாரி பிரஹலாத் சவாண்“ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மற்றும் ஊழியர்கள் பணியில் உள்ளனர். பிரசவ வலி ஏற்பட்ட பெண் மிகவும் தாமதமாக அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கான 102 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்யவில்லை” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement