ஒவ்வொருவரும் தங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்ப்பதன் மூலமும் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி ஒரே நாளில் வராது, அதற்கு ஆரோக்கியமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவதுடன் பல வாழ்க்கை முறை பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இங்கு உங்கள் இம்யூனிட்டியை அதிகரிக்க ஒரு சூப்பர் சூப் ரெசிபி உள்ளது. இதற்கு தக்காளி, பீட்ரூட் மட்டும் போதும்.
தேவையான பொருட்கள்
1½ – பீட்ரூட் (உரித்து, வேகவைத்து நறுக்கியது)
3 – வேகவைத்த தக்காளி (நறுக்கியது)
1 – வேகவைத்த உருளைக்கிழங்கு (உரித்து நறுக்கியது)
2 டீஸ்பூன் – ஆலிவ் எண்ணெய்
½ தேக்கரண்டி – ஆர்கனோ
2 டீஸ்பூன் – நறுக்கிய வெங்காயம்
உப்பு மற்றும் மிளகு – ருசிக்கேற்ப
பரிமாற: 2 டீஸ்பூன் – வறுத்த பிரெண்ட் துண்டுகள்
எப்படி செய்வது?
முதலில் பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு, ப்யூரி வரும் வரை அடிக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில், ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், ஆர்கனோ சேர்த்து குறைந்தது ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெஜிடபிள் ப்யூரி 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும்.
இதை வறுத்த பிரெட் துண்டுகளுடன் சூடாக பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“