ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என, அடிக்கடி தெரிவித்து வருவது, டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
, வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார்.
அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தெரிவித்தார். இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக வந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நலன் கருதி மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், வி.கே.சசிகலா, டிடிவி தினகரனுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை, எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்துள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என, எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக தெரிவித்து உள்ளது, டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைந்த அதிமுகவையே டெல்லி பாஜக மேலிடம் விரும்புவதால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அதிமுக பிளவுபட்டிருந்தால், எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அது, திமுக கூட்டணிக்கு பலமாக மாறி விடும் என, பாஜக மேலிடம் கருதுகிறது. இதே நிலை தொடர்ந்தால், பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணியை அமைக்கவும் அக்கட்சி திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக நலனுக்காக, அக்கட்சியில், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை, ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஓகே சொல்லி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முடிவு, அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மிகவும் திடமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்து உள்ளனர்.