மயாமி: சாம்பியன்ஸ் செஸ் தொடரின் கடைசி சுற்றில் இன்று உலக சாம்பியன் கார்ல்சன், பிரக்ஞானந்தா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் அமெரிக்காவின் மயாமியில் நடக்கிறது. நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, 17, உட்பட உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்கின்றனர். 7 சுற்றுக்கள் கொண்டது. ஒவ்வொரு சுற்று வெற்றிக்கும் தலா ரூ. 6 லட்சம் பரிசு கிடைக்கும்.
முதல் நான்கு சுற்றில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா (12 புள்ளி), ஐந்தாவது சுற்றில் சீனாவின் குவாங் லீயை (3 புள்ளி) சந்தித்தார். இதில் பிரக்ஞானந்தா எளிதாக வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. மாறாக போட்டியை ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா, அடுத்த இரு போட்டியில் தோல்வியடைந்தார். முடிவில் பிரக்ஞானந்தா 0-5-2.5 என்ற கணக்கில் இத்தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தார்.
ஐந்து சுற்று முடிவில் கார்ல்சன் (13), பிரக்ஞானந்தா (12), ஈரானின் அலிரேசா (11) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இன்று 7வது, கடைசி சுற்று நடக்கிறது. இதில் கார்ல்சன்-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை (இரவு 9:30 மணி) நடத்துகின்றனர். சமீபத்தில் பிரக்ஞானந்தா, கார்ல்சனை 2 முறை வீழ்த்தி இருந்தார். இதனால் இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement