மும்பை: பஞ்சாப்பில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அமிர்தசரசில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த போலீஸ் எஸ்ஐ தில்பா சிங்கின் காரில் மர்ம நபர்கள் குண்டு வைத்தனர். இது தொடர்பாக பஞ்சாப் போலீசார் டெல்லியில் 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. மகாராஷ்டிராவுக்கும் இது வந்துள்ளது. அவர்களுடன் மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஷீரடியில் ராஜேந்திரா என்ற குற்றவாளியை கைது செய்தனர். பஞ்சாப் அழைத்து செல்லப்பட்டு அவனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.