டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 1 இடங்களில் சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை (19.08.22) சோதனை நடத்தியது
சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் பிரதமர் மோடியை விமர்சித்து, மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தன. எதுவும் கிடைக்கவில்லை. இப்போது, எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். இது என்ன வித்தை மோடிஜி? நான் இங்கே டெல்லியில் இருக்கிறேன். தயவு செய்து நான் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மணீஷ் சிசோடியா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேயான போராக இருக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மோடிக்கு முக்கிய சவாலாகக் கருதுவதால், அவரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும் படிக்க |