ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி சப்ளையரான ஃபாக்ஸ்கான் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் நாட்டின் வடக்கு பகுதிகளில் உற்பத்தியினை அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தாய்வானை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், Bac Giang மாகாணத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் பேருக்கு வேலை
ஃபாக்ஸ்கானின் இந்த முதலீட்டின் மூலம் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பினை அளிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து ஃபாக்ஸ்கான் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை.
வியட்நாம் அரசாங்கம் கடந்த ஆண்டு ஃபாக்ஸ்கான் தென் கிழக்கு ஆசிய நாட்டில் 1.5 பில்லியன் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தற்போது இந்த முதலீட்டு ஒப்பந்தம் வந்துள்ளது.
உற்பத்தி அதிகரிக்கும்
இதன் மூலம் வியட்நாமில் மேற்கொண்டு உற்பத்தியினை ஊக்குவிக்கலாம் என்றும், இதனால் அங்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடர்ந்து தனது விரிவாக்கத்தினை செய்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து வருகின்றது.
சோதனை உற்பத்தி
ஆப்பிளின் சீன சப்ளையர்களான லக்ஸ்ஷேர் ப்ரிசிஷன் இண்டஸ்ட்ரி மற்றும் ஐபோன் அசெம்ப்ளர் ஃபாக்ஸ்கான் ஆகியவை, வடக்கு வியட்நாமில் ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக்புக்கின் சோதனைத் தயாரிப்பைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலும் திட்டம்
ஆப்பிள் ஐபோன் உற்பத்தியின் சில பகுதிகளை சீனாவிலிருந்து இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு மாற்ற திட்டமிட்டு வரும் ஃபாக்ஸ்கான், அங்கு இந்த ஆண்டு ஐபோன் 13 ஐ உற்பத்தி செய்யத் தொடங்கியது, மேலும் ஐபாட் டேப்லெட்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடு
சமீபத்தில் இந்தியாவில் வேதாந்தா குழுமத்துடன் இணைந்து மகாராஷ்டிராவில், சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேதாந்தா குழுமம் டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன், செமிகண்டக்டர்கள் மற்றும் செமி கண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் வசதிகளில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
எதற்காக முதலீடு
வேதாந்தா குழுமம் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை இணைந்து புனேவுக்கு அருகில் உள்ள தலேகான் என்ற பகுதியில் 1,000 ஏக்கர் நிலத்தில் மேற்கண்ட முக்கிய பிரிவுகளுக்காக முதலீடு செய்யவுள்ளதாகவும், வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் இணைந்து 1 லட்சம் கோடி ரூபாயை டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷனிலும், 63,000 கோடி ரூபாயினை செமி கண்டக்டரிலும், 3,800 கோடி ரூபாயினை செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதிகளிலும் முதலீடு செய்யவுள்ளதாக கூறப்பட்டது.
தேவை அதிகம்
சர்வதேச அளவில் செமிகண்டக்டர் தேவை அதிகம் உள்ள நிலையில் பற்றாக்குறைந்து இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள பல்வேறு நிறுவனங்களும் இதில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளன. .
Apple supplies Foxconn plans to invest $300 million dollar in vietnam
Apple supplies Foxconn plans to invest $300 million dollar in vietnam/வியாட்நாமில் $300 பில்லியன் முதலீடு செய்யும் பாக்ஸ்கான்.. இந்தியாவில் எப்போது?