பாலிவுட் திரையுலகில் இப்போது அடிக்கடி Boycott பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்குமாறு பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாக 2015 ஆம் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக, அவரின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது அதிகளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக விஜய் தேவரகொண்டா வெளிப்படையாக பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, ” உங்களின் பாய்காட் பிரச்சாரம் ஆமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. படத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதிக்கிறது. ஒரு படத்தில் நடிகர், இயக்குநர் மற்றும் நடிகையைத் தவிர, பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200, 300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது பலருக்கும் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
I support #BoycottLigerMovie yes let me reiterate that I support Boycott of #Liger movie because of the direct and indirect connection of people from the Bollywood like Karan Johar, Salman Khan and Ananya Pandey. Also, because I support #BoycottBollywood (forever and everywhere). pic.twitter.com/gaIGGVGRfg
— BoycottBollywood Supporter (@iamrudrabha) August 19, 2022
இதனால் அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை புறக்கணிக்குமாறு இப்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 25 ஆம் தேதி நாடு முழுவதும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான புரோமோஷன் பணிகள் பிரம்மாண்டமாக விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக லைகர் படத்தை புறகணிக்குமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் படக்குழுவினரிடையே எழுந்துள்ளது. கரண் ஜோகர் படத்தை தயாரித்திருக்கிறார்.