இந்தியாவில் முதல் முறையாக யுபிஐ பரிவர்த்தனை உள்பட பல்வேறு டிஜிட்டல், கார்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை அக்டோபர் 3-க்குள் கூறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் மிக பிரபலமாக உள்ள இந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு ,கட்டணம் விதிக்கப்பட்டால், அது பயனர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை வைத்து, ரிசர்வ் வங்கியின் முடிவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கட்டாயம் விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பே, போன்பே போன்ற UPI சேவையை பயன்படுத்துபவரா நீங்க.. இந்த 5 விஷயங்களை சரியா செய்ங்க!
பரிவர்த்தனை குறையலாம்
யுபிஐ பரிவர்த்தனை என்பது ஐஎம்பிஎஸ் போன்றது தான். ஆக யுபிஐ பரிவர்த்தனைக்கு ஐ எம் பி எஸ் போன்றே இருக்கலாம். இது தொகையின் அடிப்படையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டால், அது அதன் பரிவர்த்தனைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எளிதில் பயன்படுத்தலாம்
இன்றைய காலகட்டத்தில் இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை கல்வியறிவு இல்லாதவர்கள் கூட செய்து கொள்ளும் அளவுக்கு எளிமையானாதாக மாற்றியுள்ளது. இதே வங்கியில் உள்ள ஆர் டி ஜி எஸ் மற்றும் ஐ எம் பி எஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் கூட, இந்தளவுக்கு வெற்றிகரமாக இயங்கவில்லை எனலாம். இது ஒன்று எனில் மறுபுறம் கட்டணம் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்து வந்தது.
யுபிஐ வளர்ச்சி
யுபிஐ தளத்தில் ஆரம்பத்தில் வெறும் 21 வங்கிகளே இருந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. 338 வங்கியகளாக உள்ளது.
யுபிஐ வருகைக்கு பிறகு இரண்டு பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. ஒன்று பணமதிப்பிழப்பு மற்றும்கொரோனா. பணமதிப்பிழப்பு காலத்தில் மக்கள் கையில் பணம் வைத்திருந்தும் அதனை செலவழிக்க முடியாமல் தவித்ததை காண முடிந்தது. அந்த சமயத்தில் இந்த யுபிஐ சேவையை பலருக்கும் கைகொடுத்தது. கொரோனா காலத்திலும் வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள் வங்கிகளுக்கு சென்று அலைய முடியாத நிலையில், யுபிஐ சேவையே கைகொடுத்தது.
புதிய ரெக்கார்டு
இம்மாத தொடக்கத்தில் என்பிசிஐ, யுபிஐ சேவைகள் 6.28 பில்லியன் பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த சேவை தொடங்கப்பட்ட ஜூலை 2016ல் இருந்து ஒரு சாதனை எண் என தெரிவித்துள்ளது.
இது கடந்த ஜூலை 2021ல் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் எணிக்கை 3.24 பில்லியனாகும். இவ்வாறு பயனபடுத்தப்படும் யு பி ஐ பரிவர்த்தனைகளில் போன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
போன்பே கட்டணம்
யுபிஐ-க்கள் இன்று வரையில் கட்டணம் வசூலிக்க தொடங்கவில்லை. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி சராசரியாக 800 ரூபாய் பரிவர்த்தனை செய்ய செயல்படுத்த வெவ்வேறு பங்குதாரர்கள் 2 ரூபாய் செலவழிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரையில் யுபிஐ பரிவர்த்தனைக்காக போன்பே பயனர்களுக்கு மட்டும், அதுவும் சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கிறது.
பரிவர்த்தனை குறையலாம்
யுபிஐ-களின் பரிவர்த்தனையானது மிக சிறப்பாக இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் கார்டு பரிவர்த்தனை குறையலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இப்படி ஒரு நிலையில் யு பி ஐ-களுக்கு கட்டணம் விதிக்கப்படுவது பலருக்கும் குறிப்பாக சிறு வணிகங்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
யுபிஐகளுக்கு போட்டி?
ரிசர்வ் வங்கி தங்களது சில்லறை பேமெண்டுகளை செலுத்துவதற்கு, தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த கட்டண தளங்களை NEU தொடங்க அனுமதி கொடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஆறு பெரிய வணிக தளங்கள் தங்களது NEU உரிமங்களுக்கு விண்ணப்பித்துள்ளன. ஆக அவைகள் அறிமுகப்படுத்தப்படும்போது, யுபிஐ சேவைகளுக்கு வலுவான போட்டிகள் இருக்கலாம்.
Why is UPI transaction chargeable a bad idea?
Why is UPI transaction chargeable a bad idea?/UPI கட்டண அதிகரிப்பு என்பது மோசமான ஐடியா.. ஏன் தெரியுமா?