கிருஷ்ணகிரியை அடுத்த புளியஞ்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றும் கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுகுழுவுக்கு இருவரும் கையொப்பம் இட்டு தான் அனைவரையும் அழைத்தார்கள்.
பொதுக்குழுவுக்கு முந்தைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தும் இருந்தது, இதற்கிடையில் பல்வேறு வகையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஓ.பி.எஸ் ஈடுபட ஆரம்பித்து விட்டதாவிட்டதாகவும், இதுதொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல் மூன்றாவது நபரைப் போல நீதிமன்றம் சென்றார்
என விமர்சித்தார் .
அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்தவர் அதிமுகவுக்காக எந்தத் தியாகமும் செய்யாதவர் ஏதோ ஒரு சூழ்நிலையில் கிடைத்த வாய்ப்பால் சட்டமன்ற உறுப்பினர் ஆகி வருவாய்த்துறை அமைச்சர் ஆகிறார், பல்வேறு சூழ்நிலையால் ஜெயலலிதா அவரை முதல்வரக்குகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அவரை தலைமையில் உட்கார வைத்து ஒரு ஒரு தொண்டரும் அழகு பார்த்தார்கள். உண்மையான தொண்டர்கள் தலைமை கழகம் சென்றிருந்தால் தலைமை அலுவலகத்திற்கு சிறு மாசு கூட ஏற்பட அனுமதித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் தலைமைக் அலுவலகத்தைத் உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனால்தான் ஓபிஎஸ் எங்களை அழைப்பதற்கான தார்மீக உரிமையை இழக்கிறார்கள். அதிமுகவில் இருப்பதற்கு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது நபராக ஒபிஎஸ் இருக்கிறார் என தெரிவித்தார்.அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம் என்றார். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் இல்லை என கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
ஓபிஎஸ் தன்னுடைய சுயநலத்திற்காக கட்சியையும் கட்சித் தலைமையையும் பயன்படுத்தியுள்ளார் அதேபோல் சசிகலாவையும் பயன்படுத்தி இருக்கிறார். ஓபிஎஸ்க்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ சுயநலமாக இருக்கிறார் என கேபி முனுசாமி கூறினார்.